1. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
2. புதிதாக அறிமுகப்படத்தப்பட உள்ள ‘தங்க அட்டை‘ குடியுரிமைத் திட்டத்தின் கீழ் அமெரிக்க உயர் பல்கலைக்கழகங்களிலிருந்து இந்திய பட்டதாரிகளை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமர்த்திக் கொள்ள முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
3. சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் கண்காணிக்க ‘மைக்ரோ சிப்‘ பொருத்தும் பணியை பெருநகர சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
4. பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி ஆகியோரக்கு பிறகு தில்லியின் நான்காவது பெண் முதல்வர் என்கிற பெருமைக்குரியவராகி இருக்கிறார் ரேகா குப்தா.
5. இந்தியா முழுவதும் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
6. ஹெட்போன், இயர்போன் போன்ற மிகை ஒலிக் கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
7. சுங்கத் துறை மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளுக்கு கைது அதிகாரமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
8. ‘ஐ.நா.வில் ஹிந்தி‘ ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2030 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான 5 ஆண்டு கால திட்ட புதுப்பிப்புக்கான ஒப்பந்தத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் பி.ஹரீஷ் மற்றும் ஐ.நா. சர்வதேச தகவல் தொடர்பு துறை செயலர் மெலிஸா ஃபிளெமிங் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
9. மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல்விஷவாயு கசிந்த ஆலையில் இருக்கும் நச்சுக் கழிவுகளை தார் மாவட்டம் பீதம் பூர் பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் எரித்து அழிப்பதற்கு மாநில உயர்நிதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்ச நிதிமன்றம் மறுத்தது.
10. போபாலில் இயங்கிவந்த யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையில், கடந்த 1984-ஆம் ஆண்டு டிசம்பர் 2, 3-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது.