TNPSC தகவல் துளிகள் (27.02.2025)

1. ஒடிஸா  மாநிலம் சாண்டிபூர் கடற்பகுதியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய கடற்படை சார்பில் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் புதுமையான ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது.

2. அமெரிக்காவில் முதலீட்டாளர் விசா திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக 5 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ. 43 கோடி) ‘தங்க அட்டை‘ விசாக்களை அறிமுகப்படுத்த அந்நாட்டு அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

3. உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

4. 1974-ஆம் ஆண்டில் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பது என்றும், இதற்குப் பதிலாக இலங்கை வசமிருந்த கன்னியாகுமரி அருகேயுள்ள தாது வளமிக்க சிறு தீவை இந்தியாவுக்கு விட்டுக் கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

5. 8-ஆவது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளது.

6. தமிழகத்தில் இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி விளையாட்டுகளுக்கான ஒழுங்கு முறைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

7. தெலங்கானாவில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப்பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

8. பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.