TNPSC தகவல் துளிகள் (26.02.2025)

1. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26-ல் நிறைவடைகிறது.

2. கடந்த 1984-இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

3. கும்பமேளா நடைமுறையை ஏற்படுத்தியவர் ‘அத்வைதம்‘ முன்மொழிந்த ஆதிசங்கரர் என்று கூறப்படுகிறது.

4. நிர்வாணி, அடல், நிரஞ்சனி, ஆனந்த், ஜூனா, ஆவாஹன், அக்னி, நிர்மோஹி, திகம்பர் அனி, நிர்வாணி அனி, நயா உதாசீன், படா உதாசீன், நிர்மலா என்று 13 ஆயுதம் ஏந்திய அகோரி துறவியரின் திருமடங்கள் (அகாடா) கும்ப மேளாக்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

5. 1918-இல் நடந்த கும்பமேளாவில் அண்ணல் காந்தியடிகள் கலந்துகொண்டு புனித நீராடினார்.

6. ரஷியா-உக்ரைன் இடையிலான போரில் அமைதியான தீர்வை எட்டுவதற்கு, ஐ.நா.வில் உக்ரைன் கொண்டு வந்த வரைவு தீர்மானத்துக்கு எதிராக ரஷியாவுக்கு சாதகமாக அமெரிக்கா வாக்களித்தது.

7. குஜராத் மாநிலம் காந்திநகர் ஐஐடி-இல் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.

8. சென்னையில் கோபாலபுரத்தில் ரூ. 8 கோடியில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, வீரர்களின் குத்துச் சண்டை போட்டியை பார்வையிட்டார்.