TNPSC தகவல் துளிகள் (25.02.2025)

1. ‘முதல்வர் மருந்தகம்‘ திட்டத்தை சென்னையில் இருந்து காணொலி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

2. பிஎம் கிஸான் திட்டத்தின்கீழ் (விவசாயிகள் உதவித் தொகை) 19-ஆவது தவணையாக சுமார் 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடிக்கு அதிகமான நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.

3. சென்னை கோபாலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாதெமியை முதல்வர் மு.க.ஸ்டாலின், திறந்து வைக்கிறார்.

4. 2022-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் முதல் காசி தமிழ் சங்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

5. ‘தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணியில் உத்தரகண்ட் சுரங்க விபத்தில் அனுபவமுள்ள ‘எலிவளை சுரங்க‘ முறை தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

6. ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, நடிகர்கள் மோகன்லால், ஆர். மாதவன், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி, போஜ்புரி பாடகர் – நடிகரான முன்னாள் பாஜக எம்பி தினேஷ் லால் யாதவ், ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் வீரர் மனுபாக்கர், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு பாடகி ஸ்ரேயா கோஷல் போன்றவர்களுடன் ஒன்றிணைந்து, நாட்டை மேலும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் மாற்றுவோம் எனக் குறிப்பிட்டு ‘உடல் பருமனுக்கு எதிரான போராட்டம்‘ எனவும் எக்ஸ் வலைத்தளத்தில் ஹேஸ்டாக் செய்திருந்தார் பிரதமர் மோடி.

7. ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் ஃப்ரெட்ரிச் மெர்ஸ் தலைமையிலான கன்சார்வேட்டி கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றது.