TNPSC தகவல் துளிகள் (24.02.2025)

1. கி.பி. 1706 ஜூலை 9-ஆம் தேதி தரங்கம்பாடி வந்து சேர்ந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சீகன்பால்கு 1715-ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரம் கொண்டு தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாரில் கடுதாசிப் பட்டறையில் அச்சகம், காதித ஆலை, மை தயாரிக்கும் தொழிற்சாலை, பித்தளை மற்றும் ஈயம் போன்ற உலோகங்களால் தமிழ் எழுத்துகள் தயாரிக்கும் கூடத்தை அமைத்தார்.

2. பாகிஸ்தான் – வங்கதேசம் இடையே நேரடி வர்த்தகம் தொடங்கியுள்ளது.  அதன்படி காகிஸ்தானின் குவாஷிம் துறைமுகத்தில் இருந்து அரசு ஒப்புதலுடன் 25,000 டன் அரிசி வங்கதேசத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

3. நாட்டில் 8-இல் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்னை உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

4. தெலங்கானா மாநிலத்தின் யாதகிரி குட்டாவில் உள்ள ஸ்ரீ லக்ஷமிநரசிம்ம சுவாமி கோயிலில் நாட்டின் மிக உயரமான தங்க முலாம் பூசப்பட்ட கோபுரத்துக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

5. தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்துக்கு வழங்கி இருக்கிறது.