TNPSC தகவல் துளிகள் (22.02.2025)

1. அமெரிக்காவின் டைம் வார இதழின் 2025-ஆம் ஆண்டின் சிறந்த பெண்கள் பட்டியலில் அஸ்ஸாமைச் சேர்ந்த வனவிலங்கு உயிரியலாளரான பூர்ணிமா தேவி பர்மன் (45) இடம்பெற்றுள்ளார்.

2. ‘சமக்ர சிக்ஷா‘ போன்ற மத்திய அரசின் ஆதரவு பெற்ற திட்டங்கள் தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

3. பிஎம்ஸ்ரீ பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையில் முன்மாதிரி பள்ளிகளாகக் கருதப்படுகின்றன.

4. ‘எல்.என்.ஜி‘ எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ‘எல்.பி.ஜி‘ எனப்படும் பெட்ரோலிய எரிவாயு இரண்டும் கத்தாரில் இருந்தான இந்தியாவின் முக்கிய இறக்குமதிகள்.  

5. உணவு தேட எறும்புகள் செல்லும்போது, ‘ஃபெர்மோன்‘ என்னும் ரசாயனத்தை சுரந்த வண்ணம் செல்கின்றன.

6. இருநாட்டு எல்லைட்ப படைகளின் துணை கமாண்டர்களுக்கு இடையே தொலைத்தொடர்பை மேம்படுத்த புதிய முன்னெடுப்பை தொடங்க இந்தியாவும் வங்கதேசமும் முடிவு செய்துள்ளது.

7. உத்தர பிரதேசத்தின் பொருளாதாரத்தில் ரூ.3 லட்சம் கோடி உயர்வதற்கு மகா கும்பமேளா உதவும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.