TNPSC தகவல் துளிகள் (21.02.2025)

1. தில்லியின் 9-ஆவது முதல்வராக ரேகா குப்தா மற்றும் அவரது அமைச்சரவையில் ஆறு பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
2. மணிப்பூரில் அரசிடமிருந்து கொள்ளையடித்த ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை அடுத்த ஏழு நாள்களுக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்று மாநிலத்தின் அனைத்து சமூகத்தினருக்கும் ஆளுநர் அஜய் குமார் பல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணைய துணைத் தலைவராக எழுத்தாளர் இமையம் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சர்வதேச தாய்மொழி தினம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
5. சென்னை கொளத்தூர் ஜெகநாதன் தெரு முதல்வர் படைப்பகம் அருகில், சென்னைகிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘ஆண்டு முழுவதும் அன்னம் தரும் ‘அமுதக் கரங்கள்‘  என்ற திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவளித்தார்.
6. சுற்றுலா வளர்ச்சிக் கழக உணவகங்களில் உணவின் தரத்தை மேம்படுத்த, சமையல் கலை நிபுணரான தாமேதரன் மூலம் பயிற்சி மற்றும் அறிவுரை வழங்கப்பட்டு வருவதாக அத்துறையின் கூடுதல் செயலர் கா. மணிவாசன் தெரிவித்துள்ளார்.
7. வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் ‘நிமெசலைட்‘ மருந்து தடை செய்யப்பட்டுள்ளது.
8. தமிழகத்தில் புதிதாக அமைப்பப்பட்ட நவீன நெல் சேமிப்புத் தளங்கள், கொள்முதல் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
9. அரியலூர், போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்), மேட்டூர் (சேலம்), சிங்கம்புணரி (சிவகங்கை), பக்களப் பள்ளி (வேலூர்), ராமகிருஷ்ணராஜபேட்டை (திருவள்ளூர்) ஆகிய இடங்களில் நெல் தானிய செயல்முறை கிடங்கு வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
10. மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மார்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.