1. சென்னையில் மின்தேக்கிகளை (கெப்பாசிட்டர்) உற்பத்தி செய்யும் ஆலையை ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் தொடங்கவுள்ளது.
2. திருச்சி மாவட்டம், சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்க துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
3. தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல் முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார்.
4. லோக் ஆயுக்த அமைப்பின் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜ மாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
5. உலக சுகாதார நிறுவனத்தின் நிகழாண்டுகான நோய்களின் சர்வதேச வகைப்பாடு (ஐசிடி) ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என மத்திய அரசு தெரிவித்தது.
6. ஒரு லிட்டருக்கு 3 மில்லி கிராமுக்கு குறைவான ‘பிஓடி‘ அளவு இருப்பதே குளிப்பதற்கு பாதுகாப்பானதாகும்.
7. பிலிப்பின்ஸின் தலைநகர் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிர்வாகம் அறிவித்துள்ளது.