1. தேசிய திறன் மேம்பாட்டு திட்டமான
‘திறன்மிகு இந்தியா (ஸ்கில் இந்தியா)‘ திட்டம் அடுத்த ஆண்டு இறுதிவரை தொடருவதற்காக
ரூ. 8,800 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
2. உபரி நதிநீர் திட்டமான தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு
இணைப்புக் கால்வாய் திட்டம் 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி முதல்வர் கருணாநிதியால்
இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு தற்போது திருநெல்வேலியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
3. சுமார் 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு
வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 0.25 சதவீதம்
குறைத்து 6.25 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
4. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை
கைகாலில் விலங்கிட்டு நாடுகடத்தும் கொள்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில்
உள்ளது.
5. தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை
2,961-ஆக உயர்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
6. திருநெல்வேலி மாவட்டத்தில் மறுகால்
குறிச்சி, மூலைக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்
என திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
7. சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா
பொது நூலகத்திற்கு 1890-ஆம் ஆண்டு மெட்ராஸ் கவர்னராக இருந்த லார்டு கன்னிமாரா அடிக்கல்
நாட்டினார்.
8. ஹென்ரிக்ஸ் அடிகளார் எழுதி அச்சில்
ஏறிய முதல் தமிழ் நூல் ‘தம்பிரான் வணக்கம்‘.
9. நாட்டு மக்களின் தொழில் திறன்களை சர்வதேச
தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் கடந்த 2022-ம் ஆண்டுக்குள் சுமார் 40 கோடி பேருக்குத்
திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் இலக்குடன் திறன் மிகு இந்தியா திட்டம் மத்திய அரசால்
கடந்த 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
10. அமெரிக்காவில் நுழைய பயன்படுத்தப்படும்
ஆபத்தான பாதை ‘டாங்கி ரூட்‘
11. ஐரோப்பிய யூனியனில் உள்ள ‘ஷெங்கன்‘
நாடுகளுக்கு எல்லை தடையின்றி பயணிக்கலாம்.
12. கொலம்பியாவிலிருந்து பனாமா நாட்டுக்குள்
அபாயகர மான வன விலங்குகள், போதைப் பொருள் கடத்தல் குழுக்கள் நிரம்பிய ‘டேரியன் கேப்‘
எனப்படும் காடு, மற்றும் மேலைப் பகுதியை அமெரிக்காவிற்குள் நுழைப்பவர்கள் 10 நாட்கள்
நடைப்பயணமாக கடக்கிறார்கள்.
13. வரும் 2032-ஆம் ஆண்டில் ஓய்ஆர் 4
என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.3 சதவீதத்திலிருந்து 2.3 சதவீதமாக
அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
14. நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள
ஐ.நா-வின் நீதிப் பிரிவான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட்
டிரம்ப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார்.
15. ‘மொழிஞாயிறு‘ என போற்றப்படும் தேவநேயப்
பாவாணருக்கு தமிழவணக்கம் செலுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.