TNPSC தகவல் துளிகள் (06.02.2025)

1. காஸா முனையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

 

2. பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்கவைத்து
சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா
உருவாகலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

3. ஜிபிஎஸ் நோய்க்கு பல்வேறு பாக்டீரியாக்கள்,
வைரஸ்கள் காரணமாக இருந்தாலும், கேம்பைலோபாக்டர் ஜேஜுனி என்ற பாக்டீரியாவால் தான்
35 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது.

 

4. குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு
தொழில் நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக ‘ஓபன்ஏஐ‘ நிறுவனத்தின்
தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.

 

5. நபிகள் நாயகத்தின் மரபில் வந்தவராக
இஸ்மாயிலி முஸ்லிம்கள் நம்பும் 4-ஆம் ஆகா கான், கரிம் அல்-ஹுசைனி காலமானார்.

 

6. காஷ்மீர் பிரச்சனை உள்பட இந்தியாவுடனான
அனைத்து இருதரப்பு பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் விரும்புவதாக
அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.

 

























7. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து
அமெரிக்கா விலகிக்கொள்வதற்கான அரசாணையை டிரம்ப் பிறப்பித்துள்ளார்.  இதன் மூலம், அந்த அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி
அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது.