TNPSC தகவல் துளிகள் (04.02.2025)

1. நெதர்லாந்தில் நடைபெற்ற 87-ஆவது டாடா
ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, சக இந்தியாரும்,
நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷை டைபிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

 

2. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு
வழங்கப்பட்ட கல்விக்கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

3. உடான் திட்டத்தின்கீழ் பணிகள் நிறைவு
பெற்றுள்ளதால் வேலூர் மற்றும் நெய்வேலியில் விரைவில் பயணிகள் விமான சேவை தொடங்கும்
என்று மாநிலங்களவையில் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் முரளீதர் மொஹோல்
தெரிவித்தார்.

 

4. மகாராஷ்டிர அரசு அலுவலகங்களின் கோப்புகளில்
பயன்பாட்டு மொழியாக மராத்திய கட்டாயமாக்கி அந்த மாநில அரசு உத்தரவிட்டது.

 

5. கடந்த 2009-இல் வெளியான ‘சோல் கால்‘
இசை ஆல்பத்துக்காக தனது முதல் கிராமி விருதை வென்ற சென்னையை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க
பாடகி, தொழிலதிபர் சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன் தனது ‘திரிவேணி‘ இசை ஆல்பத்துக்காக
2-ஆவது கிராமி விருதை வென்றுள்ளார்.

 

6. உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய
விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 4,400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் தமிழ்நாடு அணிக்கு
தங்கப் பதக்கம் கிடைத்தது.

7. நெதர்லாந்தில் நடைபெற்ற ராட்டர்டாம்
ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினை சேர்ந்த முன்னணி வீரரான
கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

8. ‘மியூனிக் பாதுகாப்பு மாநாடு‘ என்ற
பெயரில் கடந்த 1963 முதல் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் உலக நாடுகளின் அதிபர்கள்,
பிரதமர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராணுவ உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள்
உள்ளிட்டோர் பங்கேற்றுவருகின்றனர்.

9. மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு
உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை
வெல்வதற்கு தமிழ்நாட்டு வீராங்கனை கு.கமலினி துணை புரிந்தார்.





























10. உலகக் கோப்பை கோ-கோ போட்டியில் வென்ற
இந்திய அணியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த வீரர் வி.சுப்பிரமணி இடம் பெற்றிருந்தார்.