TNPSC தகவல் துளிகள் (01.03.2025)

1. 2024-25-ஆம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) மீதான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடர தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் (இபிஎஃப்ஓஸ்ரீ) முடிவெடுத்தது.

2. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லியன், பல்வேறு துறை ஆணையர்களுடன் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்தார்.

3. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்பட 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வார்த்தை கடந்த 2008-இல் தொடங்கப்பட்டது.

4. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவராக பி.அமுதா பொறுப்பேற்கவுள்ளார்.

5. மத்திய மின் துறை வெளியிட்ட மின்விநியோக நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில், தமிழக மின்பகிர்மான கழகம் 48-ஆவது இடத்தில் உள்ளது.

6.  தமிழகத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் 1937-ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது.

7. அலுவல் மொழி சட்டத்தில் 1965-ஆம் ஆண்டுக்குப் பிறகும் ஹிந்தி பேசாத மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் வரையும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும் என்று கூறப்பட்டது.

8. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

9. புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளிவெடிப்பை ஆதீத்யா விண்கலத்தில் உள்ள கருவி காட்சிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

11. ஆதித்யா விண்கலத்தில் உள்ள சோலார் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப் எனப்படும் சூட் கருவியானது சூரியனின் முதல் இரு அடுக்குகளான போட்டோஸ் பியர் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் குறித்தும், புற ஊதா கதிர்களுக்கு அருகே ஏற்படும் கதிர் வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.

12. 2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளர்ச்சி தேவை என உலக வங்கி தெரிவித்தது.

13. சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆன்மிக பயணம் மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.