1. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு
பறவைகள் சரணாலயத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில், அது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
2. மணப்பாறையில், பாரத சாரணர், சாரணியர்
இயக்கத்தின் 24 மாநிலங்கள் மற்றும் 4 நாடுகளைச் சேர்ந்த சாரணர், சாரணியர் இயக்கத்தினர்
பங்கேற்ற தேசிய ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது.
3. வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், ஏற்றுமதியை
ஊக்குவிக்கவும் இந்தியா முழுவதும் ‘பிளாஸ்டிக் பூங்காக்கள்‘ நிறுவப்பட்டன.
4. மகாத்மா காந்தியின் 77-ஆவது நினைவு
தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடமான ராஜ்காட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி
முர்மு அஞ்சலி செலுத்தினர்.
5. இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போர்
விமானங்கள் மற்றும் 3 ஸ்கார்பீன் ரகநீர்மூழ்கிக் கப்பல்களை கொள் முதல் செய்வதற்காக,
பிரான் ஸுடன் விரைவில் ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
6. சண்டீகர் மேயர் தேர்தலில் மாற்றுக்கட்சியினர்
வாக்குகளால் பாஜக வெற்றி பெற்றது.
7. சிரியாவில் பசர் அல்-அஸாத் தலைமையிலான
ஆட்சியைக் கவிழ்த்த ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளர்ச்சிப் படையின் தலைவர்
அகமது அல்-ஷரா, அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
8. உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில்
தங்கியிருப்போரின் குழந்தைகள், அமெரிக்காவில் பிறந்த ஒரே காரணத்தை வைத்து நாட்டின்
குடியுரிமை பெறும் உரிமையை ரத்து செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.