1. இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையை
நவம்பர் 1947-இல் ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார்.
2. அடுத்த இரு ஆண்டுகளுக்குள் குலசேகரன்பட்டினம்
ஏவுதளம் முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
3. விண்வெளி ஆய்வின் சிற்பி எனப் போற்றப்படும்
விக்ரம் சாராபாய், இஸ்ரோவின் முதல் தலைவராக கடந்த 1963-இல் பொறுப்பேற்றார்.
4. தில்லியில் நடைபெற்ற குடியரசு தின
அணிவகுப்பில் மகா கும்பமேளாவைக் காட்சிப்படுத்திய உத்தர பிரதேசத்தின் அலங்கார ஊர்தி
முதல் பரிசை வென்றுள்ளது.
5. முப்படைகளில் ‘ஜம்மு-காஷ்மீர் ரைஃபிள்ஸ்
படைப் பிரிவு வீரர்களின் அணிவகுப்பு குழுவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
6. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிடையே பொருளாதார
ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 15 உறுப்பு நாடுகளுடன் கடந்த 1975-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட
அமைப்பு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமுதாயம் (எகோவாஸ்).
7. குஜராத் மாநிலம் துவாரகாவில், பலகட்ட
அகழாய்வுகளை நடத்த, மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
8. 1947-ஆம் ஆண்டு முதல் 7 ஊதியக் குழுக்களை
மத்திய அரசு அமைத்துள்ளது.
9. இந்தியாவில் வெள்ளையரை எதிர்த்து முதன்முதலாக
விடுதலைப் போர் நிகழ்த்திய மன்னர் நெற்கட்டான் செவ்வல் பூலித்தேவர்.