1. இந்தியாவில் முதல் முறையாக தென் அமெரிக்காவில்
உள்ள ‘சுரினாம்‘ நாட்டின் ராணுவத்துக்கு, ஆவடியில் உள்ள படைத்துறை உடைதொழிற்சாலையில்
ஆடைகள் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
2. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக
ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நிராட மிகவும்
சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது.
3. ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில்
நடைபெற்ற ‘ரைசினா மத்திய கிழக்கு‘ என்று மத்திய கிழக்கு நாடுகளுடனான புவிசார் அரசியல்
மற்றும் புவிசார் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
4. இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லவொரு
பிணைப்பே என்னை உருவாக்கியது என்று மைக்ரோ சாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா
நாதெள்ளா தெரிவித்தார்.
5. திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவராகத்
திகழ்ந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் பெருமையைப் போற்றும் வகையில், உருவச்
சிலையுடன் கூடிய நினைவு அரங்கமும், 1987-ஆம் ஆண்டில் நடைபெற்ற இட ஒதுக்கீட்டு போராட்டத்தில்
காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 21 சமூக நீதிப் பேராளிகளின் தியாகத்தைப்
போற்றும் வகையில் மணிமண்டபமும் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் கட்டப்பட்டது.
6. காங்கோவில் முக்கிய நகரத்தை கைப்பற்ற
முயன்ற எம்-23 கிளர்ச்சியாளர்கள் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினர் இடையிலான மோதலில்,
ஐ.நா., வின் அமைதி காக்கும் குழுவினர் உட்பட 13 பேர் பலியாகினர்.
7. ஒலியின் வேகம் திரவங்களை விட திடப்பொருள்களில்
அதிகம்.
8. அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள மெக்சிகோ
வளைகுடா, உலகில் பெரியது.