1. பொது இடங்களில் நடப்பட்டுள்ள அரசியல்
கட்சிகள், அமைப்புகள் உள்பட அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும். 3 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கையை எடுக்க அரசுக்கு
ஐகோர்ட்டு ‘கெடு‘ விதித்து உள்ளது.
2. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்
(இஸ்ரோ) கீழ் செயல்படும் திரவ உந்துவிசை அமைப்புகள் மையம் (எல்.பி.எஸ்.சி.), கேரள மாநில
தலைநகர் திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது.
3. விஞ்ஞானி எம்.மோகன் என்பவரை உந்துவிசை
அமைப்பின் இயக்குனராக, இஸ்ரோ தலைமை நியமித்து உள்ளது.
4. ஐ.சி.சி.யின் ஆண்டின் சிறந்த டெஸ்ட்
கிரிக்கெட் வீரராக இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஐஸ்பிரித் பும்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த ஒரு நாள் போட்டி வீராங்கனை விருதை மந்தனா
வசப்படுத்தி இருக்கிறார்.
5. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்
நாட்டில் 44 செ.மீ. மழை பதிவாகும்.