1. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அமீர்
அம்சாவிற்கு கோட்டை அமீர் விருது மதநல்லிணக்கம் பேணுதலுக்காக வழங்கப்பட்டது.
2. சென்னை மாவட்டத்தை சேர்ந்த முன்னணி
தீயணைப்பு வீரர் வெற்றிவேல் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெற்றார்.
3. இந்தாண்டு குடியரசு தினத்தின் கருப்பொருள்,
‘பாரம்பரியமும் வளர்ச்சியும்‘ என்பதாகும்.
4. சங்கீத நாடக அகாடமி ஏற்பாடு செய்திருந்த,
வாழ்க பாரதம் என்று பொருள்படும், ‘ஜெயதி ஜெய மம பாரதம்‘ என்ற பெயரில், இந்த கலாசார
நிகழ்ச்சி குடியரசு தின அணிவகுப்பில் நடத்தப்பட்டது.
5. இந்தாண்டுக்கான குடியரசு தின அணிவகுப்பு,
‘ஸ்வர்ண பாரதம் – பாரம்பரியத்தில் இருந்து வளர்ச்சி‘ என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது.
6. கேப்டன் ஆஷிஷ் ரானா தலைமையிலான ராணுவத்தின்,
‘தி டேர் டெவில்ஸ்‘ பிரிவைச் சேர்ந்த சாகசக் குழு, மோட்டார் சைக்கிள்களில் வந்து சாகச
நிகழ்ச்சிகளை நடத்தியது.
7. விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளம்
மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண் விளையாட்டு குடுவை, மனித உருவத்தின் கால் பகுதி,
அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.
8. ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் இத்தாலியின்
சின்னர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
9. நாட்டின் முதல் இதயமாற்று அறுவை சிகிச்சை
நிபுணரான, டாக்டர் செரியன் காலமானார்.
10. கோல்கட்டாவில் நேற்று நடந்த குடியரசு
தின அணிவகுப்பில் நம் நாட்டு ராணுவத்தில் சமீபத்தில் இணைக்கப்பட்ட ரோபோ நாய்கள் மிடுக்காக
நடை போட்டன.