TNPSC தகவல் துளிகள் (26.01.2025)

1. உலக அளவில் அறிவுசார் சொத்துரிமை தாக்கல்
செய்வதில் இந்தியா 6-ஆவது இடத்தில் உள்ளது.

 

2. தமிழகத்தில் நடிகர் அஜித்குமார், நடிகை
ஷோபனா, நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருது, பாரதி ஆய்வாளர்
சீனி விஸ்வநாதன், கிரிகெட் வீரர் ஆர்.அஸ்வின் உள்பட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது என
மொத்தம் 13 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

3. தமிழகத்தைச் சேர்ந்த மிருதங்கவித்வான்
குருவாயூர் துரை (கலை), கே.தாமோதரன் (சமையல்), லட்சுமிபதி ராமசுப்பய்யர் (இலக்கியம்,
கல்வி, இதழியல்), எம்.டி.ஸ்ரீநிவாஸ் (அறிவியல், பொறியியல், புரிசை கண்ணப்ப சம்பந்தன்
(கலை), ஆர். அஸ்வின் (விளையாட்டு), ஆர்.ஜி.சந்திர மோகன் (வர்த்தகம் மற்றும் தொழில்),
ராதா கிருஷ்ணன் தேவசேனாபதி (கலை), சீனி விஸ்வநாதன் (இலக்கியம் மற்றும் கல்வி), வேலு
ஆசான் (கலை), புதுச்சேரியைச் சேர்ந்த பி.தட்சிணாமூர்த்தி (கலை), கேரளத்தைச் சேர்ந்த
ஐ.எம்.விஜயன் (விளையாட்டு), தில்லியைச் சேர்ந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன்
(பொது விவகாரம்) உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

4. 2024 மக்களவைத் தேர்தலில் சிறப்பாக
பணியாற்றியதற்காக திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அதிகாரி பாஸ்கர பாண்டியனுக்கு முதல்
பரிசையும், கலைச்செல்விக்கு (காஞ்சிபுரம்) இரண்டாம் பரிசையும், கிராந்தி குமாருக்கு
(கோவை) மூன்றாவது பரிசையும் ஆளுநர் வழங்கினார்.

 

5. தெற்குரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையர்
ஏ.இப்ராஹிம் ஷெரீப்புக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

6. மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த
ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

 

























7. ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில்
சிறை சென்ற நடராசன் 1939 ஜனவரி 15-லும், தாளமுத்து மார்ச் 11-லும் மரணம் அடைந்தனர்.  அவர்களின் நினைவிடம் பெரியார் ஈ.வெ.ரா.வால் திறந்து
வைக்கப்பட்டது.