TNPSC தகவல் துளிகள் (25.01.2025)


1. பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால்தலைமையில்
21 மக்களவை எம்.பி.க்கள் மற்றும் 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்ற கூட்டுக் குழு
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டு, ஆய்வுக் கூட்டங்கள்
நடத்தப்பட்டு வருகின்றன.

 

2. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆயுதத்த
தொழிற்சாலை வாரியத்தின்கீர் பண்டாரா மாவட்டத்தின் ஜவாஹர்நகர் பகுதியில் ஆயுத தயாரிப்புத்
தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

 

3. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின்
கீழ், மீஞ்சூர் மற்றும் நெல்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள்
செயல்பட்டு வருகின்றன.

 

4. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள
பேரூரில் ரூ. 4,276.44 கோடியில், தினமும் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட
கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

 

5. சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப்
பொருள் விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

6. நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில்
கடந்த மாதம் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த ‘புல்லட் ராஜா‘ என்ற காட்டு
யானை, கோதையாறு வனப் பகுதியில் கொண்டு விடப்பட்டது.

 

7. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில்
2025-ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது.

 

8. தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி
24ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

 

9. பிரான்ஸ் அரசாங்கம் அந்த நாட்டின்
அனைத்துப் பள்ளிகளிலும் அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) பயன்படுத்தப்படுவதை 2025 ஜனவரி
முதல் தடைசெய்து சட்டத் நிறைவேற்றி உள்ளது.

 

10. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, சேலம் மாவட்டம் மாங்காடு, தூத்துக்கடி மாவட்டம்
ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வு
முடிவுகள்தான் தமிழகத்தில் இரும்பை உருக்கி பயன்படுத்திய தொழில்நுட்பம் 5,300 ஆண்டுகளுக்கு
முன்னரே இருந்ததை இப்போது பறைசாற்றியுள்ளன.

 

11. தமிழக தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட
அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புணே நகரில் இருக்கும் பீர்பால் சகானி, அகமதாபாதில்
உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருக்கும்
பீட்டா அய்வகம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டு பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டன.

 

12. பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகம்
முழுவதும் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘கலையரசன்‘, ‘கலையரசி‘ விருதுகள்
வழங்கி கௌரவித்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

 

13. குளிர் காலத்தில் ஆர்எஸ்வி எனப்படும்
சுவாசப் பாதை தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவி வருகிறது.

 

























































14. இந்தியாவில் தரைவழி, கடல்வழி மற்றும்
வான்வழி போக்குவரத்துக்கும், பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் இந்திய மண்டல வழிகாட்டுதல்
செயற்கைக்கோள் அமைப்பை (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டது.