1. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் ‘இரும்பின் தொன்மை‘ எனும் நூலை வெளியிட்டு
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
அறிவித்தார்.
2. மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில்
டங்ஸ்டன் கனிமச்சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
3. தமிழ்நாட்டில் மாங்காடு (சேலம்), கீழ்நமண்டி
(திருவண்ணாமலை), மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி), ஆதிச்சநல்லூர், சிவகளை (தூத்துக்குடி)
ஆகிய இடங்களில் உள்ள இருமபுக்கால ஈமக்குழிகளில் இருந்து சான்றுகள் பெறப்பட்டன.
4. கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில்
அகழாய்வுக் குழிகளில் இருந்து கிமு. 2172-இல் தமிழ் நாட்டில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக
உறுதிப்படுத்தின.
5. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர்
ஈமத்தளத்தில் இரும்பினாலான வாள்கள், கத்திகள், ஈட்டிகள், அம்பு முனைகள், மூன்றுமுனை
ஈட்டி முதலான பொருள்கள் தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டின் காலத்தை கி.மு.
3,000 ஆண்டின் இடைப் பகுதிக்குக் கொண்டு சென்றது.
6. தூத்துக்குடி மாவட்டத்தில் மற்றொரு
தொல்லியல் தலமான சிவகளை, இரும்புக் கால வாழ்விடப் பகுதியாகவும் ஈமத் தளமாகவும் உள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் உள்ளேயும்
வெளியேயும் கத்திகள், அம்பு முனைகள், மோதிரங்கள், உளிகள், கோடரிகள், வாள்கள் என
85-க்கும் மேற்பட்ட இரும்பினாலான பொருள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், இரும்பின்
பயன்பாடு குறைந்தபட்சம் கி.மு.3,300-க்கு முன்பிருந்தே இருக்கலாம் என அறிய முடிவதாக
நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. 2014-ஆம் ஆண்டு சுஷ்மா சுவராஜ் தலைமையில்
பாம்பனில் ‘கடல் தாமரை மாநாடு‘நடத்தப்பட்டது.
8. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த
தினம் (ஜனவரி 23), கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் ‘பராக்கிரம தினமாக‘ கொண்டாடப்படுகிறது.
9. பெண்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களுக்கு
அசௌகரியத்தை ஏற்படுத்தும் சொல், செயல்களும்கூட பாலியல் துன்புறுத்தல்தான் என சென்னை
உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
10. இந்திய வானிலை ஆய்வு மைய (ஜஎம்டி)
தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத் ராவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த சேவைக்கான
விருதை அமெரிக்க வானியல் ஆய்வு சங்கத்தின் (ஏஎம்எஸ்) அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான
ஆணையம் வழங்கியுள்ளது.
11. 76-ஆவது குடியரசு தின அணிவகுப்பில்
இந்திய ராணுவத்தின் போர் கண்காணிப்பு அமைப்பான ‘சஞ்சய்‘, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு
நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் ‘பிரளய்‘ ஏவுகணை
ஆகியவை முதல் முறையாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.
12. அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு
75 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து நிகழாண்டு குடியரசு தினம் ‘பொற்கால இந்தியா-பாரம்பரியம்
மற்றும் மேம்பாடு‘ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
13. 1.2 லட்சம் பெரியவகை பச்சோந்திகளைக்
கொல்ல தைவான் அரசு முடிவு செய்துள்ளது.