1. ஜல்கான் மாவட்டத்தில் மஹேஜிபர்தாடே
ரயில் நிலையங்களுக்கு இடையே பச்சோரா பகுதியில் தண்டவாளத்தில் வேகமாக வந்த பெங்களூரு-தில்லி
இடையிலான கர்நாடக விரைவு ரயில், பயணிகள் மீது மோதியது.
2. அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர்
மார்கோ ரூபியோவை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
3. சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் மருந்து
தரக் கட்டுப்பாடு மேம்பாட்டுக்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
4. மொழிக்காக உயிரைத் தியாகம் செய்த தாளமுத்து,
நடராசன், தருமாம்பாள் ஆகியோர் நினைவாக ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிபோர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
5. சந்திரனிலிருந்து சோதனைக்கு மண் கொண்டுவருவதற்கு
ஏவப்படும் சந்திராயன்-4 முயற்சிக்கு முன்னோடியாக, பல முறை ‘ஸ்பேஸ் டாக்கிங்‘ சோதனைகள்
இஸ்ரோவால் நடத்தப்பட இருக்கின்றன.
6. தமிழத்தில் அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி
ஆகிய இடங்களில் மட்டுமே டங்ஸ்டன் கனிம வளம் உள்ளதாக தொல்லியல் ஆய்வுத்துறை கண்டறிந்துள்ளது.
7. லடாக் யூனியன் பிரதேசத்தில் ஷியோக்
மற்றும் நுப்ரா பள்ளத்தாக்குகளுக்கு இடையே இணைப்பை மேம்படுத்தும் வகையில், ஷியோக் ஆற்றின்
மீது இந்திய ராணுவத்தால் புதிதாக கட்டப்பட்ட 2 ‘பெய்லி‘ (இரும்பு) பாலங்கள் திறந்து
வைக்கப்பட்டன.
8. காஸா போர் நிறுத்தத்தின் முதல்கட்ட
அமலாக்கத்தின்போது எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான ராஃபா எல்லை தங்கள் கட்டுப்பாட்டில்தான்
தொடர்ந்து இருக்கும் என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
9. 1898-ஆம் ஆண்டு வழக்கில், பெற்றோர்கள்
வேறுநாட்டிலிருந்து குடியேறியிருந்தாலும், அவர்களுக்கு அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள்
நாட்டின் குடிமக்கள்தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.