TNPSC தகவல் துளிகள் (22.01.2025)

1. செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன்,
வெள்ளி மற்றும் சனி ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் ஜனவரி 22-ல் வரவுள்ளன.

 

2. இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்
48 திட்டத்தை இந்தியா முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்
துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

 

3. அன்னி பெசன்ட் அம்மையார், காசி மஹாராஜா
பிரபு நாராயண் சிங், தர்பங்கா ராஜா ராமேஷ்வர் சிங் உதவியுடன் 1916-ஆம் ஆண்டு பனாரஸ்
ஹிந்து பல்கலைக்கழகம் உருவானது.

 

4. சென்னை மெரீனா கடற்கரை சாலையில் அமைந்துள்ள
விவேகானந்தர் இல்லம், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் 1842ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

 

5. மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்த
மாளவியாவுக்கு காந்தியடிகள் ‘மஹாமனா‘ என்ற பட்டம் அளித்துக்கொளரவித்தார்.

 

6. ஜனவரி 12-ஆம் நாள் விவேகானந்தர் பிறந்தநாள்,
இளைஞர்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

























7. பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து
வருவதால் தேசிய தடுப்பூசி அட்டவணையில் எம்எம்ஆர் (மீஸல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா) தடுப்பூசியை
சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.