1. ஆண்டுதோறும் அக்டோபர் மூன்றாவது வாரம்
முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை காலமாக கருதப்படுகிறது.
2. கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார்
தோற்றுவித்த சத்திய ஞானசபை வளாகம் உள்ளது.
3. 1960-களில் அமெரிக்காவின் குடியுரிமைச்
சட்டம் திருத்தப்பட்டு, அனைத்து இனத்தவருக்குமான தேசமாக அது மாறத்தொடங்கியது.
4. அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தில்
விகேக் ராமஸ்வாமி, துளசி கப்பார்ட், காஷ் படேல், ஹர்மீத் தில்லான், டாக்டர் ஜே பட்டாச்சார்யா,
ஸ்ரீராம் கிருஷ்ணன் என்று ஆறு இந்திய வம்சாவளியினர் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
5. 2014-இல் நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்
படி 188 நாடுகளில் தமிழர்கள் புலம் பெயர்ந்துள்ளார்கள்.
6. சிங்கப்பூரில் ‘செந்தமிழ் வரிசை‘ எனவும்
மோரீஷஸில் ‘பால தரங்கிணி‘ எனவும் தொடக்கப்பள்ளிகளுக்கு தமிழ் பல்லூடகப் பேழைகள் தயாரித்துப்
பயன்படுத்தி வருகின்றனர்.
7. குடியரசு தின அணிவகுப்பில் தெலங்கானாவின்
லம்பாடி, உத்தர பிரதேசத்தின் மயூர் ராஸ், மேற்கு வங்கத்தின் புருலியா சாவ் உள்ளிட்ட
நடனங்கள் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன.
8. 2023-24 நிதியாண்டில் அதிகப்படியான
சுரங்க ஏலங்களை மேற்கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் ராஜஸ்தானும் உள்ளது.
9. உத்தரகண்ட் மாநில ‘பொது சிவில் சட்டத்தின்
கீழ் (யுசிசி) வகுக்ப்பட்ட விதிகளுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
10. வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்சியில்
அமெரிக்க துணை அதிபராகப் பதவியேற்றார் ஜே.டி.வான்ஸ்.