1. மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால்
2020-இல் தொடங்கப்பட்ட ‘ஸ்வாமித்வ‘ திட்டம் என்பது கிராமப்புற கணக்கெடுப்பு மற்றும்
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் கிராமப் பகுதிகளின் வரைபடம் தயாரிப்பது ஆகும்.
2. கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல்
வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று சியால்டா நீதிமன்றம்
தீர்ப்பளித்தது.
3. அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு
வழங்க கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
4. இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார
மையத்துக்கு தமிழ் புலவர் திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
5. ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்
வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கடந்த 2018-இல் தொடங்கப்பட்டது.
6. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஆராதனை
விழாவில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள்
பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர்.
7. 1800-களில்தான் குரோவர் க்ளீவ் லாண்ட்
டிரம்ப் போல் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.
8. கேரளத்தின் புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியான
நாராயண குரு நிறுவியது சிவகிரி மடம்.
9. ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர்
தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
10. தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும்
குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த பொது சுகாதாரத்துறை
திட்டமிட்டுள்ளது.