1. பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில்
செயல்படும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த 2023, அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் எல்லைக்குள்
புகுந்து 1,200-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததுடன், சுமார், 250 பேரை பிணைக் கைதிகளாக
பிடித்துச் சென்றனர்.
2. சிவகங்கையில் அமைக்கப்பட்ட சுதந்திரப்
போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜனவரி 22-ஆம் தேதி
திறந்து வைக்கிறார்.
3. 2024-2025-ஆம் நிதியாண்டுக்கான அரசின்
நிதிநிலை அறிக்கையில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில்
3 லட்சம் சதுர அடி பரப்பளவில், உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் நவீன வசதிகளுடன்
கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
4. பருவ நிலை மாற்றம் காரணமாக பார்வோ
வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
5. ‘மாநில அரசால் நிர்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின்
வேந்தராகச் செயல்படும் ஆளுநருக்கு அந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில்
முக்கிய பங்குள்ளது‘ என பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் எம்.ஜகதீஷ் குமார்
தெரிவித்தார்.
6. அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதாரம்
6.7 சதவீத வளர்ச்சியில் தொடரும் என உலக வங்கி தெரிவித்தது.