1. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்
அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சதீஷ் தவன் விண்வெளி அய்வு
மையத்தில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2. பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் ஆய்வு
நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி
ஆகிய இரு விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக டிசம்பர் 30-ஆம் தேதி விண்ணில்
நிலைநிறுத்தப்பட்டு ஜனவரி 16-ல் வெற்றிகரமாக விண்ணில் ஒருங்கிணைத்து புதிய மைல்கல்
சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.
3. அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு
போட்டியில் 20 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம், பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தருக்கு
முதல் பரிசு வழங்கப்பட்டது.
4. அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு
போட்டியில் சேலம் பாகுபலி காளை முதல் பரிசுக்குத் தேர்வானது.
5. இந்திய-சீன, பூடான்-சின எல்லைகளை ஒட்டிப்
பல ‘டுன்டியன்‘ குடியிருப்புகள் சீனா உருவாக்கி இருப்பதை எதிர்கொள்ள இந்திய அரசும்
‘துடிப்பான கிராமங்கள்‘ (வைப்ரண்ட் வில்லேஜஸ்) என்கிற திட்டத்தை உருவாக்கி, எல்லையோர
கிராமங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் தடுக்க முற்பட்டிருக்கிறது.
6. பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை
ஆட்சியில் நடைமுறைக்குக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.
7. பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்திரா
காந்தி அணு ஆராய்ச்சி மையம், இண்டியன் ரேர் எர்த்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவின்
தடைப் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
8. பிகார் மாநிலம், பாட்னா உயர்நீதிமன்ற
தலைமை நீதிபதியாக இருந்த கே.வினோத் சந்திரன், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
9. இந்தியாவினி 76-வது குடியரசு தின விழாவில்
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று
வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்தது.
10. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா
விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளியில்
நடந்தார்.