TNPSC தகவல் துளிகள் (16.02.2025)


1. கல்லூரி மாணவர்களுக்கு வானவியல் ஆய்வுகள்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி, பள்ளி ஆசிரியர்களுக்கான வானவியல்
மற்றும் விண்வெளி அறிவியல் ஆய்வு மாநாடு சென்னையில் தொடங்கியது.

 

2. சட்டத்துறை வரலாற்றில் முதல் முறையாக
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி
பேராசிரியர் ஏழுமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

 

3. ஊக்க மருந்து புகார் எதிரொலியாக உலகின்
நம்பர் 1 வீரர் இத்தாலியன் ஜேக் சின்னருக்கு 3 மாதங்கள் தடை விதித்து உலக ஊக்கமருந்து
தடுப்பு முகமை (வாடா) உத்தரவிட்டது.

 

4. சத்தீஸ்கர் மாநில உள்ளாட்சித் தேர்தலில்
மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளிலும் மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது.

 

5. ரஷியாவின் சைபீரியா பகுதியில் சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டது