1. இந்தியாவின் முன்னெடுப்பின்கீழ் இந்தியப்
பெருங்கடலில் உள்ள ஆழ்கடல் மலைகளுக்கு ராஜ ராஜ சோழன், அசோகர், ஹர்ஷவர்தன், சந்திரகுப்தர்
ஆகிய பேரரசர்களின் பெயர்கள் சூடப்பட்டுள்ளன.
2. கடலுக்கு அடியில் 6,000 மீட்டர் ஆழம்
வரை சென்று ஆய்வு மேற்கொள்வதற்கான ‘சமுத்திரயான்‘ திட்டம் செயல்படுகிறது.
3. சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 16-ல் தொடங்கவுள்ளது.
4. ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய
மாதமாக அறிவிக்கக்கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5. மூன்றாம் ஆண்டு காசி-தமிழ் சங்கம்
நிகழ்ச்சி, உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெறவுள்ளது
என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
6. 2024-இல் தோற்றுவிக்கப்பட்ட கலைஞர்
விருது முதல் முறையாக புலவர் முத்துவாசிக்கு முதல்வர் வழங்கினார்.