TNPSC தகவல் துளிகள் (15.02.2025)

 

1. ‘மிஷன் 500‘ என்ற திட்டத்தின் கீழ்
இந்தியா – அமெரிக்கா இடையேயான இரு தரப்பு வர்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.
43.31 லட்சம் கோடி (500 பில்லியன் டாலர்) அளவுக்கு இரட்டிப்பாக்க இரு நாடுகளும் முடிவு
செய்துள்ளன.

 

2. அதிநவீன எஃப்-35 போர் விமானத்தை இந்தியாவுக்கு
வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

 

3. இந்தியா அமெரிக்கா இடையே 16 ஆண்டுகளுக்கு
முன்பு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ‘123‘ அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்த
கட்டத்துக்கு எடுத்துச்செல்ல பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தையில்
தீர்மானிக்கப்பட்டது.

 

4. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில்
‘காசி தமிழ் சங்கமம் 2025‘ பிப். 15 தொடங்குகிறது.

 

5. தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்க்கு
‘ஒய்‘ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

 

6. காசி தமிழ் சங்கமம் 3.0 -வின் மையப்
பொருண்மை ‘அகத்தியர்‘ என்பதாகும்.

 

7. சென்னை நகரில் வாகன நெரிசலைத் தவிர்க்கும்
பொருட்டு, குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் விரைவில்
திறக்கப்படும் என்று முதல்வர் மு.க. டாலின் தெரிவித்தார்.

 

8. பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, உயிரி
தொழில்நுட்பம், குறைமின் கடத்திகள் (செமி கன்டக்டர்ஸ்), வின்வெளித் துறை உள்ளிட்ட துறைகளில்
முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியில் அரசுகளுக்கு
இடையேயும், இரு நாடுகளின் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயும்
ஒத்துழைப்பை மேம்படுத்த ‘ட்ரஸ்ட்‘ என்ற முக்கிய தொழில்நுட்பம் மூலம் உறவில் சிறந்த
மாற்றத்தை உருவாக்குதல் என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய அமெரிக்கா மற்றும் இந்தியா தரப்பில்
ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

 

9. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா நகரில்
பயங்கரவாதிகள் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த
சிஆர்பிஎஃப் படைவீரர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர்
புகழஞ்சலி செலுத்தினர்.

 











































10. டாடா குழுமத்தலைவர் என்.சந்திரசேகரனுக்கு
கௌரவநைட்ஹுட் பட்டத்தை பிரிட்டன் வழங்கியது.