TNPSC தகவல் துளிகள் (15.01.2025)

1. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 65 வயது
முதியவர் காட்டு யானையால் மிதித்து கொல்லப்பட்டதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.



2. வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தை மாதம்
பூச நட்சத்திரத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறும்.



3. இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை தமிழ்நாடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.1.2025 அன்று சென்னை, கீழ்பாக்கம்.



4. ஏமன் மீதான குண்டுவீச்சுக்கு பதிலடி
கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதால்
அந்த நாடு முழுவதும்பதற்றம் நீடித்து வருகிறது.



5. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக
திபெத்தின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.



6. மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்சீர்
ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

7. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியா
தீபகற்பத்தை 2014-இல் ரஷியா ராணுவ நடவடிக்கை மூலம் தனது நாட்டுடன் இணைத்தது.

 

8. சேலம், தலைவாசலில் ரூ.564 கோடியில்
அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி
நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

 

9. 1864-ஆம் ஆண்டில் ஏற்பட்ட புயல் பேரழிவு,
அடுத்தடுத்து ஏற்பட்ட (1866 மற்றும் 1871) பருவமழை தோல்விகளுக்குப் பின்னர், 1875-ஆம்
ஆண்டில் இந்திய வானிலை ஆய்வுத் துறை தொடங்கப்பட்டது.

 





















10. உலகின் உயரமான போர்க்களமாக விளங்கும்
சியாச்சின் பனிமலையில் ராணுவ வீரர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் அதிவேக இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.