1. சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல்
நீதிபதிகளாக உள்ள நீதிபதிகள் வி.லஷ்மிநாராயணன், பி.வடமலை ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக
நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
2. அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவின்கீழ்
தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் இப்பிரிவு சார்ந்த பிற அனைத்து அதிகாரங்களையும்
பயன்படுத்தி, மணிப்பூர் அரசின் அனைத்து செயல்பாடுகள் மற்றும் மாநில ஆளுநரின் அனைத்து
அதிகாரங்களையும் குடியரசுத் தலைவர் எற்றுள்ளார்.
3. அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர்
யாதவை அரசியல் சாசனத்தின் 124 (4) பிரிவின்படி பதவிநீக்கம் செய்யக்கோரி 55 எம்.பி.க்கள்
கையொப்பமிட்டு மாநிலங்களவை செயலகத்திடம் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
4. முத்ரா திட்டத்தின ‘தருண்‘ பிரிவின்கீழ்
கடன் வாங்கி முறையாகத் திருப்பிச் செலத்தியவர்களுக்கு மட்டுமே, ‘தருண் பிளஸ்‘ என்ற
திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
5. தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் அமெரிக்காவைச்
சேர்ந்த மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்டின் புதிய வளாகத்தை அந்த மாநில முதல்வர்
ஏ.ரேவந்த் ரெட்டி திறந்து வைத்தார்.