TNPSC தகவல் துளிகள் (14.01.2025)

1. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய
ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்து ரூ.86.62
என்ற நிலையை எட்டியது.

 

2. 1979-ஆம் ஆண்டு கிரீன்லாந்து தீவுக்கு
சுயாட்சி வழங்கப்பட்டது.  கிரீன்லாந்து ஐரோப்பிய
பூனியனில் அங்கம் வகிக்கும் டென்மார்க்குக்கு சொந்தமானதாக இருந்தது.

 

3. இந்தோ-பசிபிக் பிந்தியத்தில் சீனாவின்
ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி, சுதந்திரமான வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் அமைதியை நிலவச்
செய்வதற்காக ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள
‘க்வாட்‘ கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

 

4. கடல்மட்டத்தில் இருந்த 8,650 அடி உயரத்தில்
அமைந்துள்ள சோன்மார்க் சுரங்கப் பாதை செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், ஸ்ரீநகர்-லே
இடையே அனைத்துப் பருவநிலைகளிலும் போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும்.

 

5. இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கிழக்கு
லடாக் எல்லையில் மோதல்போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பதாக ராணுவ தலைமைத் தளபதி
உபேந்திர துவிவேதி தெரிவித்தார்.

 

6. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு
அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில் நுட்பங்களுடன்
கூடிய ‘நாக்மாக் – 2‘ என்ற புதிய பதிப்பு பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

7. இந்தியவானிலை ஆய்வுத் துறை தனது
150-ஆவது நிறுவன தினத்தை ஜனவரி 14 கொண்டாடியது.

 

8. நாட்டை ‘வானிலை சூழலுக்கு தயாராகவும்,
பருவநிலைக்கு உகந்த‘ நாடாக மாற்றும் நோக்கத்துடன் ‘மிஷன் மௌசம்‘ (வானிலை இயக்கம்) திட்டத்தை
பிரதமர் தொடங்கி வைத்தார்.

 

 

9. ஜனவரி 15-ஆம் தேதி ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

 







































10. இந்திய இளைஞர்கள் எப்போதும் நம்பிக்கையைக்
கைவிட வேண்டாம் என்று முப்படைத் தலைமைத் தளபதி அனில் சௌஹான் வலியுறுத்தியுள்ளார்.