TNPSC தகவல் துளிகள் (13.02.2025)

1. ஆக்கபூர்வ அணுசக்தி ஒத்துழைப்பின்
கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன.

 

2. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம்
100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

3. உச்சநீதிமன்றம், ‘இலவச ரேஷன் மற்றும்
பணம் கிடைப்பதால் மக்கள் உழைக்க விரும்புவதில்லை‘ என்று தெரிவித்தது.

 

4. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே
இயக்குவதற்கு 12 பெட்டிகள் கொண்ட முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் தயார் நிலையில்
உள்ளது.

 

5. அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை
விமான தளத்தில் பணிபுரிந்து வந்த வீரர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
செய்து கொண்டார்.

 

6. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்
சட்டம் 1998-இன் படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம்
மாமல்லபுரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம்
உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

 

7. 1984-இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான
கலவரம் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.சஜ்ஜன் குமாரை தில்லி
நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

 

8. தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பெண்களின்
சேர்க்கை விகிதம் 36 சதவீதமாக முன்னேற்றமடைந்துள்ளது என்றார் உயர் கல்வித்துறை அமைச்சர்
கோவி. செழியன்.

 

9. மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டிரியா
கிருமியால் தொழுநோய் ஏற்படுகிறது.

 





































10. பாலியல் தொந்தரவு புகார்களை மாணவர்கள்
அச்சமின்றி ‘14417‘ என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று பள்ளிக்
கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.