1. சென்னை ஐஐடி, இஸ்ரோவுடன் இணைந்து ஆத்ம
நிர்பார் பாரத் திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் விண்வெளித் தரத்தில் செமிகண்டக்டர்
(குறை மின் கடத்தி) சிப்-பை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
2. உலக அளவில் மிகப் பழைமையான இரும்பு
1911-ஆம் ஆண்டில் வடஎகிப்தில் அல்-கெர்செவில் என்ற இடத்தில் இருந்த கல்லறையில் இருந்து
எடுக்கப்பட்டது.
3. தமிழ்நாட்டில் 5,000 ஆண்டுகளுக்கு
முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆதிச்சநல்லூர், சிவகளையில் கிடைத்த மாதிரிகளை
வைத்து தமிழ்நாடு தொல்லியல் துறை காலக்கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறது.
4. கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில்
கிடைத்த இரு இரும்புப் பொருள்களுடன் இருந்த கரிமப் பொருள்கள் ஐசோடோப்புகளின் விகிதங்களை
அளவிடும் முறையில் கணக்கீடு செய்யப்பட்டபோது ஒரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக்
காலம் கி.மு. 2122 என்று தெரிகிறது.
5. சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில்
உள்ள மாங்காடு என்ற இடத்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் இரும்பு வாள் ஒன்று கிடைத்தது.
6. திருவண்ணமலை மாவட்டம், வந்தவாசி, கீழ்நமண்டியில்
2023-இல் நடந்த அகழாய்வில் இரும்பு ஈமப் பேழைகள் கண்டெடுக்கப்பட்டது.
7. குடும்ப வன்முறை, வரதட்சிணை கொடுமை
என பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் பெண்களுக்கான
நீதிமன்றத்தை (நாரி அதாலத்) அனைத்து மாநிலங்களிலும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தெரிவித்தார்.
8. மிஷன் சக்தி திட்டத்தின்கீழ் கிராமப்
பஞ்சாயத்து அளவில் இயங்கி வரும் பெண்களுக்கான நீதிமன்றங்கள் திட்டம் தற்போது அஸ்ஸாம்
மற்றும் ஜம்மு காஷ்மீரில் சோதனைக் கட்டத்தில் உள்ளது.
9. கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார்
தெய்வநிலையத்தில் 154-ஆவது தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.