TNPSC தகவல் துளிகள் (12.01.2025 & 13.01.2025)

1. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற
வழக்குகளை விசாரிக்க சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்பட ஏழு இடங்களில்
சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

 

2. அரசமைப்புச் சட்டத்தின் 176-ஆவது பிரிவின்படி,
ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்ற வேண்டும்.

 

3. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்
ஸ்ரீநகர்-கார்கில் தேசிய நெடுஞ்சாலையில் சோன்மார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர
மோடி ஜனவரி13-ல் திறந்துவைத்தார்.

 

4. நிகழாண்டுமுதல் சிறந்த பண்பாட்டுத்
தூதர் விருது இலங்கையின் கிருஷ்ண காந்தன் சந்தீப் பெற்றார்.

 

5. மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில்
மத்திய அரசால் கடந்த 2004-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய விவசாயிகள் ஆணையம், வேளாண்
விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட முக்கியப் பரிந்துரைகளை வழங்கியது.

 

6. ஜிஎஸ்டி வரி விதிப்பு இந்தியாவில்
0%, 3%, 5%, 12%, 18%, 28% என்று ஆறு பிரிவுகள் இருக்கிறது.

 

7. தமிழகத்தின் சராசரி மழையளவு 914 மி.மீ.
ஆகும்.

 

8. 2008-இல் அன்றைய முதல்வர் கருணாநிதியால்
‘ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்‘ தொடங்கப்பட்டு 2015 முதல் செயல்படத் தொடங்கியதால்,
வேலூர் மாவட்டத்தின் தண்ணீர் பிரச்னை தீர்ந்தது.

 

9. மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான
முன்னோட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும்
பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

 

10. உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பௌஷ பௌர்ணமியையொட்டி ஜனவரி 13-ல்
கோலாகலமாக தொடங்கியது.

 

11. சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்
(ஜனவரி 12) தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.

 













































12. உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும்
பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவர்களை கண்டறிய இன்டர் போல் (சர்வதேச காவல் துறை ஒத்துழைப்பு
அமைப்பு) அண்மையில் அறிமுகம் செய்த ‘சில்வர்‘ நோட்டீஸ் (வெள்ளி எச்சரிக்கை அறிவிப்பு)
என்ற புதிய நடைமுறை, இந்தியாவின் முன்மொழிவு‘ என்று சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட் கூறினார்.