1. உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும்
இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி
விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
2. சென்னை மற்றும் சுற்றியுள்ள நான்கு
மாவட்டங்களில், ஆட்சேபணை இல்லாத நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை
கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
3. பிரதமரின் எழுச்சி பெறும் இந்தியா
பள்ளிகள் என்ற ‘பிஎம் – ஸ்ரீ திட்டம் 14,500 பள்ளிகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகும்.
4. தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், தில்லி
ஆகியவை மட்டுமே கல்வி அமைச்சகத்துடன் பிஎம் – ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
5. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள்
சார்ந்த சர்வதேச மாநாட்டுக்கு இமானுவல் மேக்ரானும் பிரதமர் மோடியும் தலைமை வகிக்கின்றனர்.
6. தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை ஏழுகிணறு
பகுதியில் வள்ளலார் வசித்த இல்லத்தில் அன்னதானத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
பி.கே.சேகர்பாபு தொடங்கிவைக்கவுள்ளார்.
7. கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை
ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினார்.
8. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் சர்வதேச
இதழில் வெளியான உலகின் தலை சிறந்த கல்லூரிகள் பட்டியலில், 60-ஆவது இடத்துக்கு சென்னை
மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) தேர்வாகியுள்ளது.
9. மதுரை திருப்பரங்குன்றம் மலையில் சமணர்
தொடர்பான நினைவுச் சின்னங்கள் அதிக அளவு உள்ளன.
10. கிரேக்க நாட்டில் கி.மு. 4, 5 – ஆம்
நூற்றாண்டுகளில் ஹிப்போக்ராட்டிஸ் (போரேட்) என்பவரின் ஆதரவுகளின் வாயிலாக உருவானதுதான்
யுனானி மருத்துவமுறை.