TNPSC தகவல் துளிகள்
1. 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையும், தவறான நோக்கத்துடன்
பெண்களைப் பின்தொடர்ந்து சென்றால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்க வகை செய்யும்
சட்டத் திருத்த மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன.
2. கனடாவில் லிபரல் கட்சியின் தலைவர்
பதவிக்கு போட்டியிடவுள்ளதாக இந்திய வம்சாவளி எம்.பி. சந்திரா ஆர்யா தெரிவித்துள்ளார்.
3. மத்திய அரசின் நேரடி வருவாயில் 28
மாநிலங்களுக்கு வரிப் பகிர்வாக ரூ. 1,73,030 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதில் தமிழகத்தின்
பங்காக ரூ. 7,057.89 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
4. சிறைத் தண்டனையோ, அபராதமோ டிரம்பிற்கு
விதிக்கப்படாவிட்டாலும், அமெரிக்க அதிபராக இருந்த ஒருவர் குற்றவியல் வழக்கில் குற்றவாளியாக
அறிவிக்கப்பட்டு, தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
5. பரவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக
பாரீஸ் ஒப்பந்தத்தில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் வெப்ப அதிகரிப்பு 1.5 டிகிரி செல்ஷியசுக்குள்
கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
6. கடந்த 2024-ஆம் ஆண்டுதான் இதுவரை பதிவு
செய்யப்பட்டதிலேயே மிக வெப்பமான ஆண்டு என்று சர்வதேச வானிலை அமைப்புகள் தெரிவித்தன.
7. மகளிர் சுய உதவிக் குழுக்கள் நிதி
மேலாண்மை உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்படுவதற்காக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘மின்மதி 2.0‘ கைப்பேசி செயலியை தொடங்கிவைத்தார் துணை
முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
8. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம்
தமிழர் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
9. மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில்
8 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் பத்தாவது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது.
10. முன்னாள் முதல்வர் கருணாநிதி
2009-ஆம் ஆண்டு ஜுலை 23-ஆம் தேதி ரூ. 5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்படும் முதல்வர்
காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கினார்.
11. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு
வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘பிரவாசி பாரதிய சம்மான்‘ விருதை 27 பேருக்கு குடியரசுத்
தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
12. உச்சநீதிமன்றத்தின் கம்பீர தோற்றத்தை
காணவும், உள்கட்டமைப்புகளை ரசிக்கவும் 29ஆவது முறையாக பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
13. வனஉயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம்,
1972-இன்கீழ் அட்டவணை 1-இல் பட்டியலிடப்பட்டது. மேலும், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின்
(ஐயுசிஎன்) சிவப்பு பட்டியலில் அழிந்து வரும் உயிரினங்கள் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ள
இந்திய எறும்புத்தின்னி பாங்கோலினை ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள எல்லை
கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) அருகில் இந்திய ராணுவம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பு
துறையினர் மீட்டனர்.