1. இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்புரின்
முதல்வர் எம்.பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
2. தமிழ் திரை உலகின் முதல் மக்கள் தொடர்பாளராக
திகழ்ந்த மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய ‘கலைஞர் 100‘ எனும் நூல் அண்மையில்,
வெளியிடப்பட்டது.
3. 2015-இல் இயற்றப்பட்ட சிறார் நீதி
சட்டம் 18 வயதுக்கு உட்பட்டவர்களை சிறுவர், சிறுமியர் என வரையறுக்கிறது.
4. பெண் குழந்தைகளை கருவிலே கண்டறிந்து
கொன்று விடுவதைத் தடை செய்யும் விதத்தில் 1994-இல் சட்டம் இயற்றப்பட்டது.
5. குழந்தைகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தக்
கூடாது என்ற நோக்கத்தில் 2012-இல் ஆண்டில் போக்ஸோ சட்டம் இயற்றப்பட்டது.
6. பெங்களூரு எலஹங்கா விமான தளத்தில்
‘ஏரோ இந்தியா‘ நிகழ்ச்சியையொட்டி தேஜஸ் போர் விமானத்தில் சாகசப் பயிற்சியில் ஈடுபட்டார்
விமானப் படை தலைமைத் தளபதி அமர் பிரீத் சிங்
7. சவூதி அரேபியா நாட்டில் ரூ. 5.4 லட்சம்
கோடியில் உருவாகி வரும் ‘திரியா‘ என்ற நகரில் முதலீடுகளை மேற்கொள்ள இந்திய நிறுவனங்கள்
ஆர்வம் காட்டி வருகிறது.
8. 2035-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி
மையத்தை அமைக்கும் திட்டமிட்டுள்ளது.
9. 2013-ஆம் ஆண்டில் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட
தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும்
30 வகையான பாதிப்புகள் உள்ளனவா என்பது மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது.
10. திருச்சி அருகே ரூ.18.63 கோடியில்
அமைக்கப்பட்ட பறவைகள் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.