1. செயற்கை நுண்ணறிவுக்காக கோவையில் அரசு
மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் 20 லட்சம் சதுர அடியில் ‘தகவல் தொழில்நட்ப வெளி‘
நிறுவப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
2. 1999-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர்
மு. கருணாநிதி சென்னையில் டைடல் பூங்காவை உருவாக்கினார்.
3. இடஒதுக்கீடு நடைமுறைகளால் பலனடைந்தவர்களை
இடஒதுக்கீடு சலுகைகளில் இருந்து விலக்குவது குறித்த முடிவை நிர்வாகமும் சட்டப் பேரவையும்
எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
4. தென்னிந்திய திரைப்பட பிரபல பின்னணிப்
பாடகர் பி.ஜெயசந்திரன் (80) உடல்நலக்குறைவால் காலமானார்.
5. கோ கோ உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க
இருக்கும் இந்திய ஆடவர் அணிக்கு பிரதிக் வாய்கரும், மகளிர் பிரிவுக்கு பிரியங்கா இங்லேவும்
கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
6. நாட்டின் மரபணு மாறுபாடுகளின் வரைபடத்தை
உருவாக்கும் ‘ஜீனோம்‘ திட்டத்தின்படி ஆரோக்கியமாக உள்ள 10 ஆயிரம் இந்தியர்களின் மரபணு
மாறுபாடுகளின் விரிவான தரவுகளை ஆய்வுக்காக பிரதமர் மோடி வெளியிட்டார்.
7. லெபனான் அதிபராக ராணுவ தளபதி ஜோசப்
ஆவுனை அந்த நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்தது.
8. தமிழ்நாடு அரசு, ‘தமிழ்நாடு பொது சுகாதாரச்
சட்டம், 1939-இன்‘ கீழ், பாம்புக்கடியை ‘அறிவிக்கக் கூடிய நோயாக‘ நவம்பர் 6-ஆம் தேதி
2024ல் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
9. இலவசங்கள் வேண்டுமா அல்லது சிறந்த
உள்கட்டமைப்புடைய சாலைகள், கால்வாய்கள், குடிநீர் விநியோகம் போன்ற வசதிகள் வேண்டுமா
என்பதை குடிமக்களே தீர்மானிக்க வேண்டும் என 16-ஆவது நிதிக் குழுவின் தலைவர் அரவிந்த்
பனகாரியா வியாழக்கிழமை தெரிவித்தார்.