TNPSC தகவல் துளிகள் (09.02.2025)


1. தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில்,
மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக கூட்டணி 48 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களிலும்
வெற்றி பெற்றன.

 

2. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி
இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91,558  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

3. பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க
வேண்டும் என, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் சுதா
சேஷய்யன் வலியுறுத்தினார்.

 

4. 
மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் புதுமைப் பெண்,
தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து
வருவதாக துறையின் அமைச்சர் கோவி. செழியன் கூறினார்.

 

5. முதல் கணவரிடம் இருந்து சட்டபூர்வமாக
விவாகரத்து பெறாவிட்டாலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125-இன் கீழ் 2-ஆவது
கணவரிடம் ஜீவனாம்சம் கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

6. தனியார் மற்றும் வணிக வளாகங்களில்
மின்சார வாகனங்களுக்கான இ-சார்ஜிங் வசதி நிறுவுவது கட்டாயம் என்றுமத்திய கனரக தொழிற்சாலைகள்
துறை இணையமைச்சர் ஸ்ரீனிவாச வர்மா தெரிவித்தார்.

 





























7. ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்
தலமான சோன்மார்க் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில்
பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் தீக்கிரையாகின.