TNPSC
தகவல்
துளிகள்
1. பொங்கள் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 9 அன்று சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சின்னமலையில்
உள்ள நியாயவிலைக் கடையில் தொடங்கிவைத்தார்.
2. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா
பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது, அவர்களுக்கு
ஸ்கரப் டைபஸ் காய்ச்சல் ஏற்படுகிறது.
3. மூத்த பத்திரிகையாளரும் கவிஞரும் திரைப்பட
தயாரிப்பாளருமான பிரீதிஷ் நந்தி (73) மும்பையில் மாரடைப்பால் காலமானார்.
4. ‘பெண்களின் உடல் வடிவம் குறித்து பாலியல்
ரீதியில் வர்ணிப்பதும் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகக்
கருதப்படும்‘ என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
5. நியூஸிலாந்து கிரிக்கெட் வீரரான மார்ட்டின்
கப்டில் (38), சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
6. இந்தியாவில் மூலைமுடுக்கெல்லாம் பாரபட்சமன்றி
கடந்த 25 ஆண்டுகளாக வியாபித்த மிக சாதாரண சளித் தொற்றுதான் இப்போது எச்எம்பி தீநுண்மி
(ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ்) என்ற பெயரில் பெரிதுபடுத்தப்படுகிறது.
7. ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக்
கட்சி ஆட்சியமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்ஸாண்டர்
ஷலன்பர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
8. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம்,
லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது.
9. அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே
கார் குண்டு வெடிப்பு நடத்திய ராணுவ வீரர் மாத்யூ லிவல்பர்கர், அதற்கு செயற்கை நுண்ணறிவு
(ஏஐ) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.