1.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி. நாராயணன் நியமிக்கப்பட்டார்.
2.
தில்லியில் உள்ள 70 தொகுதிகளில் 58 பொதுத் தொகுதிகள். 12 தனித் தொகுதிகளாகும்.
3.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,09,636 பேர், பெண் வாக்காளர்கள்
1,16,760 பேர், இதர வாக்காளர்கள் 37 பேர் என மொத்தம் 2,26,433 வாக்காளர்கள் உள்ளனர்.
4.
சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தின் புனித நகரமான ஷிகாட்ஸேவில் சக்தி வாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டது.
5.
‘பாரதிய அந்தரிக்க்ஷ ஸ்டேஷன்‘ எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் விண்ணில்
நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
6.
இந்தியாவில் குற்றம் புரிந்துவிட்டு வெளிநாடுகளில் பதுங்கும் குற்றவாளிகளைக் கண்டபிடிப்பதற்காக
‘பாரத்போல்‘ இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.
7.
விபத்து நடந்த நாளிலிருந்து ஒரு வாரத்துக்குள் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரையில்
வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
8.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் அவைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி
பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஹாஸ் சுப்ரமணியம் பகவத் கீதை மீது பதவிப் பிரமாணம்
எடுத்துக்கொண்டார்.
9.
பஞ்சாப் மாநிலம், பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோகிராம பஞ்சாயத்தில் திருமண விழாக்களில்
மது விருந்து மற்றும் ‘டிஜே‘ இசை நிகழ்ச்சியை தவிர்க்கும் குடும்பங்களுக்கு ரூ.
21,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
10.
தமிழக பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசி மதி முருகேசன் அண்மையில் அர்ஜுனா விருதிற்கு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.