TNPSC தகவல் துளிகள் (07.02.2025)

1. மத்திய பிரதேசத்தில் விமானப் படைக்கு
சொந்தமான மிராஜ்-2000 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி, வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.

 

2. திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான்
சிப்காட் வளாகத்தில் ரூ.3,800 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டிபி (டாடா பவர்) சோலார் நிறுவனத்தில்
சூரிய மின்சக்தி தகடு (சோலார் பேனல்) உற்பத்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

 

3. சீனாவில் உருவாக்கப்பட்ட மலிவு விலை
செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக், அமெரிக்காவின் சாட்ஜிபிடியை உலக அளவில் பதிவிறக்கத்தில்
விஞ்சியது.

 

4. அமெரிக்காவில் பெண் பாலினத்துக்கு
மாறியவர்கள், மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கும் உத்தரவில்
அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார்.

 

5. 2024-ஆம் ஆண்டுதான் உலகின் அதிக வெப்பம்
நிறைந்த ஆண்டு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2025 ஜனவரி மாதமும் இதுவரை இல்லாத
அதிகபட்ச வெப்பம் நிலவிய ஜனவரி மாதம் என்று ஐரோப்பிய வானிலை மையம் தற்போது கூறியுள்ளது.

 





















6. பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்,
ஆணாக இருந்து பெண்ணாக மாறிய அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமேன் கெலிஃப், மகளிர்
குத்துச்சண்டையில் தங்கம் வென்றது பலத்த சர்ச்சைக்குள்ளானது.