TNPSC தகவல் துளிகள் (03.02.2025)

1. தமிழ்நாடு சாரணர் இயக்கத்துக்கு நவீன
பயிற்சி வசதிகளுடன் ரூ. 10 கோடியில் புதிய தலைமையகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்
தெரிவித்தார்.

 

2. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்
பொருள்களுக்கு 10 சதவீதம், கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்
பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
கையொப்பமிட்டார்.

 

3. 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய
பட்ஜெட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்து 65 ஆயிரத்து 345 கோடி.  நடப்பு நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட்
மதிப்பு ரூ.47.16 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது இது 7.4 சதவீதம் அதிகம்.

 

4. ‘சக்தி வாய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்
கால மாற்றத்துக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்
சபை தலைவர் ஃபிளெமன் யாங் கூறினார்.

 

5. தெலங்கானாவின் 3.70 கோடி மக்கள்தொகையில்
46.25 சதவீதத்தினர் முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் என்பது அந்த மாநிலத்தில்
நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

 

6. கம்புசியா அஃபினிஸ் (கொசு மீன்), பொசிலியா
ரெட்டிகுலாட்டா (கப்பி) ஆகிய இரண்டு மீன் இனங்கள் பல்வேறு மாநிலங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த
நீர்நிலைகளில் விடப்படுகிறது.

 

7. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இஸ்ரோ
அமைப்பின் 100-ஆவது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட என்விஎஸ்-02 செயற்கைக்கோளை, ஒரு புவிவட்டப்
பாதையில் இருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை
என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

 

8. மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு
உள்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியா
9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வாகை சூடியது.

 

9. ஆண்டு தோறும் பிப் – 2ஆம் தேதி உலக
ஈரநிலங்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

10. ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை
மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்கள் புதிய ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டதால்
தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் தளங்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாக 20-ஆக உயர்ந்துள்ளது.

 

11. திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு
முத்தரையர், ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோரின் மூவர் மணிமண்டபத்தை
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

 

12. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள
பிரப்பன்வலசை கடற்கரையில் ரூ.42 கோடியில் கடல் நீர் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப்
பணி வருகிற 5-ஆம் தேதி தொடங்க உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.