1. இந்தியா முழுவதும் சிறப்பாகப் பணிபுரியும் காவல் துறையினரையும் மத்திய பாதுகாப்பு படையினரையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மிகச் சிறந்த சேவைக்கான பதக்கம் (அதி உத்கிரிஷ்ட் சேவா பதக்கம்), சிறந்த சேவைக்கான பதக்கம் (உத்திரிஷ்ட் சேவா பதக்கம்) கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன.
2. தமிழ் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்ர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
3. கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
4. மத்திய அரசு சார்பில் வரும் மார்ச் 7-ஆம் தேதி ‘மக்கள் மருந்தகம் தினம்‘ கடைப்பிடிக்கப்படவுள்ளது.
5. பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) 11-ஆவது தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி துஹின்காந்த பாண்டே பதவியேற்றார்.
6. மத்திய அரசு சார்பில் வரும் மார்ச் 7-ஆம் தேதி ‘மக்கள் மருந்தகம் தினம்‘ கடைப்பிடிக்கப்படவுள்ளது.
7. 2025-26 ஆம் நிதியாண்டில் 6.5 சதவீத வளர்ச்சியுடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என சர்வதேச நிதியம் (ஐஎன்எஃப்) தெரிவித்தது.