TNPSC தகவல் துளிகள் (02.02.2025)

1. ரூ. 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு

 






































மாற்றியமைக்கப்பட்ட
வருமான வரி விகிதங்கள்


(ஆண்டு
வருமானம் ரூ.12 லட்சத்துக்கு மேல் பெறுபவர்களுக்கு)



ஆண்டு
வருமானம்



வரி விகிதம்



ரூ. 4 லட்சம்
வரை



வரி கிடையாது



ரூ. 4-8
லட்சம்



5%



ரூ.
8-12 லட்சம்



10%



ரூ.
12-16 லட்சம்



15%



ரூ.16-20
லட்சம்



20%



ரூ.
20-24 லட்சம்



25%



ரூ. 24 லட்சத்துக்கு
மேல்



30%


 

 

2. 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய
பட்ஜெட் மதிப்பு  ரூ. 50,65,345 கோடியாகும்.

 

3. அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும்
புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்படும் என்றும், இவற்றில் 200 மையங்கள்
2025-26-ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்படும்‘ என்று மத்திய அரசு அறிவித்தது.

 

4. ‘இல்லம் தேடி கல்வி‘ திட்டத்தால் தமிழகத்தில்
மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது.

 

5. பிங்க் நிற மங்களகிரி பட்டுப்புடவை
(2019), ஹிந்து கலாசாரத்தைப் போற்றும் மஞ்சள் வண்ண பச்சை பார்டர் புடவை (2020), போச்சம்பள்ளி
பட்டுப் புடவை (2021), ஒடிஸாவின் கைவினையைப் பிரதிபலிக்கும் பொம்கை ரக மெரூன் வண்ண
தங்க ஜரிகை புடவை (2022), கர்நாடகத்தின் தார்வாட் பிராந்திய கைவினையில் உருவான சிவப்பு
வண்ண எம்பிராய்டரி புடவை (2023), மேற்கு வங்கத்தின் காந்தா எம்பிராய்டரி கைவண்ணத்தைப்
பிரதிபலிக்கும் நீல வண்ணப் புடவை (2024), அதே ஆண்டு முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல்
செய்ய வந்தபோது ஊதா மற்றும் வெள்ளை நிற பாஹி கட்டா ரக கையால் நெய்யப்பட்ட புடவை,
2025-26-ல் பிகார் மாநில மதுபனி ரக புடவை பட்ஜெட் தாக்கல் செய்தபோது அணிந்திருந்தார்
நிர்மலா சீதாராமன்.

 

6. ஒடிஸா மாநில கடற்கரையில் உள்ள சந்திப்பூரில்
நடைபெற்ற குறுகிய தொலைவு வான்பாதுகாப்பு ஏவுகணையின் சோதனை வெள்ளோட்டம் வெற்றிகரமாக
நடைபெற்றது.

 

7. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன்
சாவ்லா, தில்லி தனியார் மருத்துவமனையில் காலமானார்.

 

8. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு
பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

 

9. ஆலய பிரவேசச் சட்டம், ஆதி திராவிடர்
நலனக்கெனத் தனித் துறை, ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம், இனாம் ஒழிப்புச் சட்டம், தேவதாசி
முறை ஒழிப்புச் சட்டம், இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டுவந்த சென்னை மாகாணத்தின்
முதலாவது முதல்வரான ஓமந்தூர் ராமசாமி, பொது வாழ்வில் நேர்மையுடன் வாழ்ந்தவர் என்று
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

 











































10. வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் சட்ட அகழாய்வின்போது,
சனிக்கிழமை 13 வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டன.