TNPSC தகவல் துளிகள் (01.02.2025)

1. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த
சதுப்புநிலங்களைக் காப்பதற்கான உடன்படிக்கை ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் 1971, பிப்ரவரி
2-ஆம் நாள் எட்டப்பட்டது.

 

2. மாணவர்களின் பாதுகாப்பை முழுமையாக
உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு
நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

 

3. வரும் 2025-26-ஆம் நிதியாண்டில் நாட்டின்
பொருளாதார வளர்ச்சி 6.3 முதல் 6.8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின்
பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

 

4. நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில்
நாட்டின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.2 சதவீதமாகவும்
வெளிநாட்டுக் கடன் 19.4 சதவீதமாகவும் உள்ளது.

 

5. ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்களும்
பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதார் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம்
மேற்கொண்டுள்ளது.

 

6. திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வோர்
(லிவ்-இன்) தொடர்பான தகவல்களை பதிவு செய்ய புதிய வலைதளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

7. வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆர்4 என்ற
விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

 

8. தங்களது அலுவலகங்களில் பணியாற்றும்
ஊழியர்கள், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான ‘டீப்சீக்‘கை
தங்களின் அறிதிறன் பேசிகளில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.

 

9. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா
விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் அதிக நேரம் நடந்த பெண் என்ற
சாதனையைப் படைத்துள்ளார்.

 





































10. மியான்மரில் ராணுவ ஆட்சியைத் தொடர்வதற்கான
அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.