TNPSC தகவல் துளிகள் (03.03.2025)


 1. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன்
உறவைப் புதுப்பிக்கும் வழிகளை உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கண்டறிய வேண்டும் என நேட்டோ
கூட்டமைப்பின் தலைவர் மார்க் ரூட் தெரிவித்தார்.

 

2. மகாராஷ்டிரத்தில் உள்ள ஏவியோ மருந்து
தயாரிப்பு நிறுவனம் வலி நிவாரணம் உடலுக்குக் தீங்கிழைக்கும் டேபன்டடால், கரிசோப்ரோடால்
ஆகியவற்றின் கலவை இடம்பெற்றுள்ளது.

 

3. அண்ணாவின் திரைக்கதையில் 1949-ஆம்
வருடம் வெளிவந்த ‘வேலைக்காரி‘ என்ற திரைப்படம், வீட்டு வேலை செய்பவர்களின் நிலையை நிகர்சனமாக
சித்தரித்தது.

 

4. தமிழ்நாட்டில் வீட்டுவேலை செய்பவர்களின்
உரிமைகள், அவர்களின் நலன் காப்பதற்கு நல வாரியம் 2007-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

 

5. பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த அருள் சகோதரி
ஜீன் தேவோஸால் தேசிய வீட்டு வேலைக்காரர்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.  .

 

6. இன்போசிஸ் கம்பெனியின் நிறுவனர்களில்
ஒருவரான நந்தன் நிலகேணி எழுதிய புத்தகம் இமேஜினிங்க் இந்தியா.

 

7. இடம்பெயரும் தொழிலாளர்கள் உரிமைகள்
பாதுகாக்கும் பிரகடனத்தை 1990-ஆம் வருடம் டிசம்பர் 18-இல் ஐ.நா.சபை நிறைவேற்றியதைக்
குறிக்கும் வகையில் சர்வதேச இடம் பெயரும் தொழிலாளர்கள் தினம் டிசம்பர் 18-இல் அனுசரிக்கப்படுகிறது.

 

8. 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதலாவது
ஜோதிர்லிங்கத்தலமான சோம்நாத் கோயிலில் வழிபாடு நடத்தியது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில்
பிரதமர் பதிவிட்டார்.

 

9. நாட்டில் வேலை வாய்ப்பு உயர்ந்து வருகிறது.  ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பணவீக்கத்துக்கேற்ப ஊதியம்
உயரவில்லை என நீதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி தெரிவித்தார்.

 

10. அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழியாக
ஆங்கிலத்தை அறிவிக்கும் நிர்வாக உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார்.

 













































11. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில்
உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து அந்நாட்டின் ஃபயர் ஃபிளை ஏரோஸ்பேஸ் தனியார்
நிறுவனத்தின் புளூ கோஸ்ட் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.